Monday, June 28, 2010

கவிதை - சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல...

கவிதைன்னு சொன்ன உடனே பக்கம் தாவீடாதீங்க,இது உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன்...
எனது முதல் முயற்சியான அன்ரிசர்வ்ட் ரயில் பயணத்துக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. அப்பப்போ கவிதைங்கற பேர்ல மத்தவங்கள கஷ்டப்படுத்த முயற்சி செய்வேன்... இந்த முறையும் முயன்று இருக்கேன்... தயவு செய்து பொறுமையா படிங்க...

சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல

(குறிப்பு இதை நீங்கள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்)

=============================================================

பொறுமை:

நொடிகள் வருடங்களாகின்றன பின்வரும் சமயங்களில்...

மதிய நேர கணித வகுப்புகள் ...

பெற்றோர் ஆசிரியர் கூட்ட முடிவுரை ...

பரிட்சை முடிவு வரும் முன் இரவு ...

அவசர நேரங்களில் சாலைகளில் சிவப்பு விளக்கு ...

சித்திரை மாத மதிய வேலையில் பேருந்து பயணம் ...

நேர்காணல் முடிவுக்காக காத்திருக்கும் நேரம்...

பல் வலி மருத்துவரிடம் சீட்டு வாங்கும் வரிசை ...

வார இறுதியில் அன்ரிசர்வ்ட் ரயில் பயணங்கள் ...

சம்பளம் வருவதற்கு முந்தைய இரண்டு நாட்கள்...

மனிதன் பொறுமையின் சின்னம் மேற்கூறிய தருணங்களில்...

====================================================================


செம்மொழியான தமிழ் மொழியாம்...

தம்பியின் இரங்கல் கூட்டம் நடக்க வேண்டிய வேலையில்...

அண்ணனுக்கு பாராட்டு விழா...

உடன்பிறப்பே உனக்கு என்று தமிழ் உணர்வு உண்மையில் வரும்...

செம்மொழியான தமிழ் மொழியாம்...

====================================================================
அக்கறை

என் வயிற்றின் மீதுள்ள அக்கறை...

உங்கள் கால்களின் மீதும்...

செருப்பு தைக்கும் தொழிலாளி...

=====================================================================

14 comments:

  1. கவிதைகள் நன்றாக இருக்கு தம்பி..

    இரண்டாவது கவிதை பிரபாகரனை குறித்தது.. அதில் தம்பிக்கு இரங்கல் என்று எழுதியது தவறு..
    தம்பி சாகவில்லை.. பிரபாகரன் என்பது தனி மனிதன் அல்ல சித்தாந்தம்...

    ReplyDelete
  2. //தம்பியின் இரங்கல் கூட்டம் நடக்க வேண்டிய வேலையில்...

    அண்ணனுக்கு பாராட்டு விழா...

    உடன்பிறப்பே உனக்கு என்று தமிழ் உணர்வு உண்மையில் வரும்...

    செம்மொழியான தமிழ் மொழியாம்...//

    மிக அருமை தோழா, அழகான கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகள்

    //நேர்காணல் முடிவுக்காக காத்திருக்கும் நேரம்...//
    நிச்சயமான உண்மை...

    வாழ்த்துக்கள் இன்னும் தொடுருங்கள்

    ReplyDelete
  3. @ senthil: nan adhil pirabakaranai kurippidavillai enakku ilangai thamilargal anaivarum ondru dhan... adharku oru podhu peyar dhan thambi... pinnootathukku nandir anna...

    ReplyDelete
  4. அடப்பாவி...இரண்டாவது பந்தும் சிக்ஸரா.....அட்டகாசம் தம்பி....! பொறுமை கவிதை...சரவெடி...!

    ReplyDelete
  5. @ deva : nandri anna, chumma try panni pathen, inime dhan nan college timela eludhina kavidhai ellam thedi edukkanum anna...

    ReplyDelete
  6. பொறுமை கவிதை நல்லா வந்துருக்கு தல!

    ReplyDelete
  7. மூன்றுமே முத்தான கவிதைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு டட்ச்! அருமை!

    ReplyDelete
  8. அண்ணா Word Verification எடுத்திருங்க! கமெண்ட் போட வரவங்களுக்கு கஷ்டம் அண்ணா!

    ReplyDelete
  9. @ soft ware engineer: nandri, how to take that verification i don't know, please guide me...

    ReplyDelete
  10. இன்னொன்னு மறந்துட்டிங்க ..!!
    நாம ஒரு பதிவு போட்டுட்டு யாரவது படிச்சுட்டு கமெண்ட் போட மாட்டாங்களா அப்படின்னு காத்திருக்கும் நேரங்களிலும் ...

    ReplyDelete
  11. கவிதைகள் அருமை ...!

    ReplyDelete
  12. அக்கறை

    என் வயிற்றின் மீதுள்ள அக்கறை...

    உங்கள் கால்களின் மீதும்...

    செருப்பு தைக்கும் தொழிலாளி...///

    best one

    ReplyDelete
  13. என் வயிற்றின் மீதுள்ள அக்கறை...

    உங்கள் கால்களின் மீதும்...

    செருப்பு தைக்கும் தொழிலாளி...///

    அருமை ..

    ReplyDelete