Saturday, June 26, 2010

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:
உலகில் நான் வெறுக்கும் முதல் விஷயம் அன்ரிசர்வ்ட் ரயில் பயணம். எதிர்மறையில் தான் வாழ்கையின் தத்துவங்கள் எத்தனிக்கும். நானும் கண்டுகொண்டேன் மனிதர்களின் மனங்களையும் அதன் வகைகளையும். பயணசீட்டு வரிசையில் நிற்கையில் வரிசையை மீறி உல் செல்ல நினைப்பவரும் மனிதர்தான், அதே வேலையில் சீட்டு விநியோகம் செய்பவர் சில்லறை இல்லை என்றால் சீட்டு இல்லை என்று கூறுகையில் முன்பின் தெரியாத போதிலும் சில்லறை கொடுத்து உதவுகிரரே உங்கள் பின் நிற்பவர் அவரும் மனிதர் தான்.

பெரிய நிறுவனங்களுக்கென்று எப்பொழுதுமே ஒரு பழக்கம் உண்டு, அது நேர்காணலுக்கு முந்தயதினத்தில் தொலைபேசி அழைப்பில் அறையும் குறையுமாக தகவல் கூறி நேர்காணலுக்கு அழைப்பது. இதற்கு நன் ஒன்றும் விதி விலக்கல்ல. செய்தி பெறப்பட்ட பின் அடித்து பிடித்து ரயிலுக்கு பயணசீட்டு எடுத்து உள்ளே நுழையும் வேலையில் 1 மயில் நீளம் கொண்ட அந்த ரயிலின் அனைதுப்பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. 6 மணி நேரம்தானே நின்றுகொண்டே செல்லலாம் என்று தீர்மானிக்கையில் ஒரு நப்பாசை, நாம் ஏன் ரயிலின் முன்பகுதி பெட்டியைபார்க்ககூடாது என்று, ஓட்டமும் நடையுமாக முன்பெட்டியை நெருங்கும்போது என் தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்தார். "இக்கரைக்கு அக்கறை பச்சை"

பொறுமலோடு உள்ளே புகுந்த எனக்கு மனித மனங்களை படிக்கும் வாய்ப்பு நிறைய இருந்தது. சட்டி முட்டி சாமான்களுடன் குடும்பங்கள் நின்று கொண்டு இருக்கும் வேலையில் வெளியே கதவோரம் காற்றுக்காக நிற்கும் கணவர்களுக்காக சண்டை போட்டு இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கும் போராளிகளான மனைவிகள், 6 மணி நேரமோ 8 மணி நேரமோ நிற்கப்போவது நீதானே நாங்கள் இல்லையே என்றபடி தங்கள் பேரக்குழந்தைகளை படுக்க வைத்துகொள்ளும் தாத்தாக்கள், எங்கே ஓரத்தில் குழந்தையை உட்காரவைத்தாள் சிறிது தள்ளி உட்கார சொல்லி நம் சவுகரியத்தை கெடுத்து விடுவார்களோ 1 வயது குழந்தையையும் தூங்கு தூங்கு என்று கட்டாயபடுத்தி இருக்கையின் நடுவில் தூங்க வைக்கும் அம்மாக்கள், நின்றால் என்ன உட்காந்தால் என்ன காதல் வலி அறியாது என்று கடந்த 3 மணி நேரமாக அலைபேசியில் கடலை வறுத்து வரும் காதலர்கள்.

ரயில் தாம்பரத்தை தாண்டும் வேலையி மனித வாழ்வுக்கு மூச்சு கற்று எவ்வளவு அவசியம் என்று தெரிந்தது. நடுவில் நிற்கும் எனக்கே இப்படி என்றல் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அந்த தியாகிகளுக்கு திருச்சி செல்ல என்ன அவசரமோ பாவம். நொந்து கொண்டேன், என் வயதை ஒத்த ஒரு இளைஞன் என்னை பார்த்து புன்னகைத்து பெரிய மனது செய்து ஒரு ஜான் அளவுள்ள இடத்தை எனக்கு கொடுத்தார்.ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கியது போல ஒரு சந்தோஷம் எனக்கு.

இந்த மூன்று மணி நேர கால் வழியில் என் கண்ணுக்கு வந்து போனவர்கள், ஊரெல்லாம் நடந்து சென்று கீரை விற்கும் பாட்டி, கொரியர் தபால் கொண்டு வரும் சிறுவன், துணிக்கடையில் வேலை ஓடி ஓடி துணி எடுத்துப்போடும் சிப்பந்தி, இரவு நேரத்தில் நின்று கொண்டே தூங்கும் இரவுக்காவளர்கள். அவர்களுக்கும் இதே கால்கள் இதே வலி தானே. விழுப்புரம் தாண்டியதும் அனைவரின் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. வண்டியில் உள்ள குழந்தைகள் விளையாட துவங்கினர். அந்த வலிகளையும் தண்டி 2 வயது குழந்தை தந்த பறக்கும் முத்தங்களும், முக சேஷ்டைகளும் என் மனதிற்குள் குளிர்ந்த காற்று அடித்தது. இடை வந்த தேநீர் விற்பவரும், கடலை விற்கும் பாட்டியும் என் பாதத்தின் மீது பரத நாட்டியம் ஆடுவதை ஒரு சமுதாய தொண்டாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்து வந்தனர்.

இந்த 6 மணி நேர அனுபவத்திற்கு பிறகு வழியில் நடந்து செல்லும் இளைஞர்களை கண்டால் என்னுடைய வண்டி தானாக நிற்கிறது, நேர்காணலுக்கு செல்பவர்களை கண்டால் அவர் செல்லும் இடத்துக்கு சென்று விட மனது பறக்கிறது, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க எனது நேர்காணல் அனுபவத்தை எனது அடுத்த படைப்பில் கூறுகிறேன்.

24 comments:

  1. இந்த ரயில் பயணத்துடன் இனிதே துவங்கட்டும் பதிவுலகப் பயணமும்..

    பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  2. முதல் பதிவுக்கு முதல் கமெண்ட்! வாழ்த்துக்கள் மேலும் எழுத! உங்கள் நடை நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  3. தொடருங்கள் காத்திருக்கின்றேன். முதல் பதிவுக்கு வாழ்த்துகளும் பதிவுலகத்துக்கு வரவேற்பும்.

    ReplyDelete
  4. சத்தியமா பட்டய கிளப்பிருக்கீங்க ...!! நான் ஒவ்வொரு வரியும் அற்புதம் ..
    ///மனிதர்களின் மனங்களையும் அதன் வகைகளையும். பயணசீட்டு வரிசையில் நிற்கையில் வரிசையை மீறி உல் செல்ல நினைப்பவரும் மனிதர்தான், அதே வேலையில் சீட்டு விநியோகம் செய்பவர் சில்லறை இல்லை என்றால் சீட்டு இல்லை என்று கூறுகையில் முன்பின் தெரியாத போதிலும் சில்லறை கொடுத்து உதவுகிரரே உங்கள் பின் நிற்பவர் அவரும் மனிதர் தான்.////

    இன்னும் நிறைய எழுதுங்க .. காத்திருக்கிறேன் .. !!!

    ReplyDelete
  5. சிவகங்கை சிங்கம்....அப்ஸா கல்லூரியின் எனது வாரிசு.... நடமாடும் நந்தவனம்...தம்பி...வீரமணியை பதிவுலகம் வருக வருக என்று வரவேற்கிறது....!

    லேட் என்ரீ தான் ஆனல்லும் சூப்பர் கலக்கல் முதல் பதிவு....!

    வா....தம்பி...உனக்காக பக்கங்கள் காத்திருக்கின்றன உனது வெற்றியை எழுதுவதற்காக...!

    ReplyDelete
  6. @ marees: romba naal kalichu elutharen marees, thank you

    @ deva: just an opposite proverb, annan udayan padaikku anjaan

    @ selvakumar: nandri selvakumar

    ReplyDelete
  7. முதல் பதிவுக்கு வாழ்த்துகளும் பதிவுலகத்துக்கு வரவேற்பும் வாங்க வாங்க வாங்க ..........

    ReplyDelete
  8. மிக அருமையான பதிவு வீரமணி , தொடர்ந்து இன்னும் நல்ல படைப்புகளை பதிவு செய்ய எனது வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  9. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  10. @நிகழ்காலத்தில்... nandri

    ReplyDelete
  11. உங்க ரைட்டிங் புளோ ரொம்ப நல்லாருக்கு , வாழ்த்துக்கள் , தொடருங்கள் வீரமணிகண்டன்

    ReplyDelete
  12. அன்பின் வீரமணிகண்டன்

    வருக ! வருக ! வலயுலகிற்கு வருக ! சிவகங்கைச் சீமையில் இருந்து, அப்ஸா கல்லூரியில் இருந்து, வந்திருக்கும் வீரமணிகண்ட, சிந்தனைகளைச் செதுக்கி, இடுகைகள் இட வாழ்த்துகிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  13. Please Remove this word verification as it irritates us

    ReplyDelete
  14. நிறைய எழுதி கலக்குங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. Nalla irukkirathu unathu pathivu APSA college pakkiya nee Sinkam kalam irakiruchu ...

    ReplyDelete
  16. @மங்குனி அமைச்சர்: nandri sir
    @cheena (சீனா): kandippa niraya eludhuven, by the way andha word verificationna enna sir? nan blogging ku pudhusu
    @தோழி : mikka nandri
    @சிவராஜன்:APSA college ku irukara varaverpai patha pullarikkudhu siva sir, nan anga BA ENGLISH LITERATURE, then MBA in AIM, now velai thedifying in chennai...

    ReplyDelete
  17. ///என்னுடைய வலைப்பக்கத்தில் கூட 75 கட்டுரைகளிலும் எதோ சொல்லத்தான் முயன்றிருக்கிறேன்...இதுவரை சொல்ல நினைத்தது வெளியே வரவில்லை....அது வரும் வரை...எழுத்தும் தொடரும் என்று நினைக்கிறேன்.....//

    75 காடுரைக்கும் பிறகு உங்களுக்கு இந்த நிலையா?. எனக்கு மட்டும் தான் இந்த நிலை என்ரு எண்ணியிருந்தேன்.( ஆனாலும், நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டதாகவே நான் நினைக்கிறேன தேவா சார்.)

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. @ prabu : nandri prabu... thiruthi kolgiren... word verification neeka udhaviyadharku meendum nandri...

    ReplyDelete