Monday, June 28, 2010

கவிதை - சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல...

கவிதைன்னு சொன்ன உடனே பக்கம் தாவீடாதீங்க,இது உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன்...
எனது முதல் முயற்சியான அன்ரிசர்வ்ட் ரயில் பயணத்துக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. அப்பப்போ கவிதைங்கற பேர்ல மத்தவங்கள கஷ்டப்படுத்த முயற்சி செய்வேன்... இந்த முறையும் முயன்று இருக்கேன்... தயவு செய்து பொறுமையா படிங்க...

சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல

(குறிப்பு இதை நீங்கள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்)

=============================================================

பொறுமை:

நொடிகள் வருடங்களாகின்றன பின்வரும் சமயங்களில்...

மதிய நேர கணித வகுப்புகள் ...

பெற்றோர் ஆசிரியர் கூட்ட முடிவுரை ...

பரிட்சை முடிவு வரும் முன் இரவு ...

அவசர நேரங்களில் சாலைகளில் சிவப்பு விளக்கு ...

சித்திரை மாத மதிய வேலையில் பேருந்து பயணம் ...

நேர்காணல் முடிவுக்காக காத்திருக்கும் நேரம்...

பல் வலி மருத்துவரிடம் சீட்டு வாங்கும் வரிசை ...

வார இறுதியில் அன்ரிசர்வ்ட் ரயில் பயணங்கள் ...

சம்பளம் வருவதற்கு முந்தைய இரண்டு நாட்கள்...

மனிதன் பொறுமையின் சின்னம் மேற்கூறிய தருணங்களில்...

====================================================================


செம்மொழியான தமிழ் மொழியாம்...

தம்பியின் இரங்கல் கூட்டம் நடக்க வேண்டிய வேலையில்...

அண்ணனுக்கு பாராட்டு விழா...

உடன்பிறப்பே உனக்கு என்று தமிழ் உணர்வு உண்மையில் வரும்...

செம்மொழியான தமிழ் மொழியாம்...

====================================================================
அக்கறை

என் வயிற்றின் மீதுள்ள அக்கறை...

உங்கள் கால்களின் மீதும்...

செருப்பு தைக்கும் தொழிலாளி...

=====================================================================

Saturday, June 26, 2010

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:
உலகில் நான் வெறுக்கும் முதல் விஷயம் அன்ரிசர்வ்ட் ரயில் பயணம். எதிர்மறையில் தான் வாழ்கையின் தத்துவங்கள் எத்தனிக்கும். நானும் கண்டுகொண்டேன் மனிதர்களின் மனங்களையும் அதன் வகைகளையும். பயணசீட்டு வரிசையில் நிற்கையில் வரிசையை மீறி உல் செல்ல நினைப்பவரும் மனிதர்தான், அதே வேலையில் சீட்டு விநியோகம் செய்பவர் சில்லறை இல்லை என்றால் சீட்டு இல்லை என்று கூறுகையில் முன்பின் தெரியாத போதிலும் சில்லறை கொடுத்து உதவுகிரரே உங்கள் பின் நிற்பவர் அவரும் மனிதர் தான்.

பெரிய நிறுவனங்களுக்கென்று எப்பொழுதுமே ஒரு பழக்கம் உண்டு, அது நேர்காணலுக்கு முந்தயதினத்தில் தொலைபேசி அழைப்பில் அறையும் குறையுமாக தகவல் கூறி நேர்காணலுக்கு அழைப்பது. இதற்கு நன் ஒன்றும் விதி விலக்கல்ல. செய்தி பெறப்பட்ட பின் அடித்து பிடித்து ரயிலுக்கு பயணசீட்டு எடுத்து உள்ளே நுழையும் வேலையில் 1 மயில் நீளம் கொண்ட அந்த ரயிலின் அனைதுப்பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. 6 மணி நேரம்தானே நின்றுகொண்டே செல்லலாம் என்று தீர்மானிக்கையில் ஒரு நப்பாசை, நாம் ஏன் ரயிலின் முன்பகுதி பெட்டியைபார்க்ககூடாது என்று, ஓட்டமும் நடையுமாக முன்பெட்டியை நெருங்கும்போது என் தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்தார். "இக்கரைக்கு அக்கறை பச்சை"

பொறுமலோடு உள்ளே புகுந்த எனக்கு மனித மனங்களை படிக்கும் வாய்ப்பு நிறைய இருந்தது. சட்டி முட்டி சாமான்களுடன் குடும்பங்கள் நின்று கொண்டு இருக்கும் வேலையில் வெளியே கதவோரம் காற்றுக்காக நிற்கும் கணவர்களுக்காக சண்டை போட்டு இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கும் போராளிகளான மனைவிகள், 6 மணி நேரமோ 8 மணி நேரமோ நிற்கப்போவது நீதானே நாங்கள் இல்லையே என்றபடி தங்கள் பேரக்குழந்தைகளை படுக்க வைத்துகொள்ளும் தாத்தாக்கள், எங்கே ஓரத்தில் குழந்தையை உட்காரவைத்தாள் சிறிது தள்ளி உட்கார சொல்லி நம் சவுகரியத்தை கெடுத்து விடுவார்களோ 1 வயது குழந்தையையும் தூங்கு தூங்கு என்று கட்டாயபடுத்தி இருக்கையின் நடுவில் தூங்க வைக்கும் அம்மாக்கள், நின்றால் என்ன உட்காந்தால் என்ன காதல் வலி அறியாது என்று கடந்த 3 மணி நேரமாக அலைபேசியில் கடலை வறுத்து வரும் காதலர்கள்.

ரயில் தாம்பரத்தை தாண்டும் வேலையி மனித வாழ்வுக்கு மூச்சு கற்று எவ்வளவு அவசியம் என்று தெரிந்தது. நடுவில் நிற்கும் எனக்கே இப்படி என்றல் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அந்த தியாகிகளுக்கு திருச்சி செல்ல என்ன அவசரமோ பாவம். நொந்து கொண்டேன், என் வயதை ஒத்த ஒரு இளைஞன் என்னை பார்த்து புன்னகைத்து பெரிய மனது செய்து ஒரு ஜான் அளவுள்ள இடத்தை எனக்கு கொடுத்தார்.ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கியது போல ஒரு சந்தோஷம் எனக்கு.

இந்த மூன்று மணி நேர கால் வழியில் என் கண்ணுக்கு வந்து போனவர்கள், ஊரெல்லாம் நடந்து சென்று கீரை விற்கும் பாட்டி, கொரியர் தபால் கொண்டு வரும் சிறுவன், துணிக்கடையில் வேலை ஓடி ஓடி துணி எடுத்துப்போடும் சிப்பந்தி, இரவு நேரத்தில் நின்று கொண்டே தூங்கும் இரவுக்காவளர்கள். அவர்களுக்கும் இதே கால்கள் இதே வலி தானே. விழுப்புரம் தாண்டியதும் அனைவரின் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. வண்டியில் உள்ள குழந்தைகள் விளையாட துவங்கினர். அந்த வலிகளையும் தண்டி 2 வயது குழந்தை தந்த பறக்கும் முத்தங்களும், முக சேஷ்டைகளும் என் மனதிற்குள் குளிர்ந்த காற்று அடித்தது. இடை வந்த தேநீர் விற்பவரும், கடலை விற்கும் பாட்டியும் என் பாதத்தின் மீது பரத நாட்டியம் ஆடுவதை ஒரு சமுதாய தொண்டாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்து வந்தனர்.

இந்த 6 மணி நேர அனுபவத்திற்கு பிறகு வழியில் நடந்து செல்லும் இளைஞர்களை கண்டால் என்னுடைய வண்டி தானாக நிற்கிறது, நேர்காணலுக்கு செல்பவர்களை கண்டால் அவர் செல்லும் இடத்துக்கு சென்று விட மனது பறக்கிறது, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க எனது நேர்காணல் அனுபவத்தை எனது அடுத்த படைப்பில் கூறுகிறேன்.