Wednesday, February 15, 2012

வந்தவை... காதலர் தின வாழ்த்துக்கள்...








இலகுவான மாலை நேரம். அலுவலகத்தில் இருந்து அனைவரும் சென்றபிறகு இன்றைய நாளின் மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக அடுத்த வாரம் முடிக்க வேண்டிய மின்னஞ்சல் வேலைகளை முடிக்க நினைத்து மாலை நேர தேநீர் கோப்பையில் மூழ்கிய என்னை கனவுலகம் போட்டி போட்டு வென்றது. எழுதி வெகு நாட்களாயிற்று. பழைய நண்பர்கள் மற்றும் பாலோயர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் நான் பெரிதான நம்பும் விதி அவர்களிடத்தில் இந்த பதிவை கொண்டு பொய் சேர்க்கட்டும். உலகத்தில் மனிதர்களை சேர்ப்பது தன் கடினம். மற்றவை எல்லாம் மிகவும் எளிதே.

மூன்று வயது சிறுவனாக சினிமாவிற்கு கூட்டிபோகவில்லை என்றால் டிரஸ் போடமாட்டேன் என்று அம்மாவிடம் அடம் பிடித்த சிறுவன். ஐந்து வயது சிறுவனாக காய்ச்சலே அடிக்காதபோது கழுத்தில் காய்ச்சல் அடிக்கிறது கை வைத்து பார் வெந்து போகும் அளவுக்கு சுடுகிறது என்று சொல்லி பால படத்தை பால கட் அடித்த சிறுவன். ஒன்பது வயது இருக்கும்போது பக்கத்துக்கு வீடு குழந்தையை கீழே போட்டதற்காக காலை, மதியம், மற்றும் இரவு உணவை தியாகம் செய்து மிகப்பெரிய தேடல் படலத்துகிடையே நிராயுத பணியாக மாமா விடம் சரணடைந்த சிறுவன். பக்கத்துக்கு வீடு அத்தையின் கண்ணாடி காரணமான என் கிரிகெட் பந்து, ஆசையாக வளர்த்த போது ரயிலடி பட்டு இறந்த நாய்குட்டிகள், ஞாயிறு அன்று பட இடைவெளியின்போது க்லோஸ் அப் விளம்பரம் இன்னும் சிறிது நேரம் வந்தால் ஞாயிறின் நேரம் சற்று நீளாதா என்று ஆராய்ச்சி செய்த சிறுவன். கிளிகள், புறா, மீன் தொட்டி, பேட், பந்து, சைக்கில், என்று வயதிற்கு ஏற்றதைபோல என் ஆசைகளும் வளர்ந்தது.
இப்படி ஒவ்வொரு பருவமும் மாற மாற என்னுடைய ஆசைகளும் மாறதொடங்கின. நம் முன் விரும்பிய பொருட்கள் பலவற்றை நம் திரும்ப விரும்புவதில்லை. விதியும் அதை நமக்கு திரும்பதருவதில்லை. அந்த வகையில் சற்றே அதை திரும்பி பார்க்கும் பார்வைதான் வந்தவை. பெரும்பாலும் வந்தவை அனைத்தும் சென்றவையாகவே உள்ளது. இந்த பதிவுகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜமே, துளியும் கற்பனை அல்ல. இந்த பதிவுகள் யாரையேனும் காயப்படுத்தினால் அதற்கு நானே தார்மீக பொறுப்பு என்பதை தெரிவித்து கொள்கிறேன். விரும்பியது விலகினால் எப்படி இருக்கும். முதலில் ஒன்றும் புரியாது. பின்பும் உலகமே புரியும். ஆம் விரும்புங்கள். விரும்புங்கள். விரும்புங்கள். ஒரு நாள் தடுக்கபடுவீர்கள். சிறிதே விளக்கபடுவீர்கள். பின்பு மறக்கபடுவீர்கள்.


காதல் என்றால் என்ன? ஒரு மித கருத்துள்ள இருவர் தங்கள் கருத்து பரிமாற்றத்தின் மூலமாக வார்த்தை பரிமாற்றங்களை ஏற்படுத்தி பின் அது மனபரிமற்றமாக மாறி நாளடைவில், மகிழ்ச்சி பரிமாற்றங்களில் தொடங்கி முறையே அது கவலை பரிமாற்றத்தில் முடிவு பெறுகிறது. ( தனிப்பட்ட நபர்களுக்கு இந்த முடிவுகள் மாறும் - மது, புகை, மற்றும் போதை வஸ்துக்கள் இதற்கு மருந்து அல்ல, உதரணத்திற்கு இவற்றை எல்லாம் நீங்கள் எடுதுகொண்டிருக்கும் வேலையில், உங்களுக்கு அல்வா கொடுத்தவர்கள் ( ஆண் அல்லது பெண் ) தன சக துணையுடன் காலத்தை களிக்கதொடங்கி இருப்பார். இதற்கான மருந்து எளிதானது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக அமைத்து கொள்கிறீர்களோ அவ்வளவு சிறப்பான காலனி அடி ( மன்னிக்கவும் பதிலடி ) ஐ நீங்கள் கொடுக்க துவங்கி உள்ளீர்கள் என்று அர்த்தம்.

தயவு செய்து செத்துடுவேன், என்ற வார்த்தை கண்டு மயங்கி விடாதீர்கள். முடிந்தால் விஷமோ , கயிறோ வாங்கி குடுக்கவும். உங்களை தொங்க விடுவார்களே ஒழிய அவர்கள் தொங்குவது வேறு எதையாவது பிடித்து தான்

ஆகவே மக்களே காதல் செய்வீர், களவு செய்வீர், கற்று மறப்பீர். பிறந்த குழந்தை அழும், நடக்கும்போது விழும், இருந்தாலும் பின்பு சரித்திரத்தில் தனது நடையை பதிவு செய்ய தொடங்கும்.

ஆகவே நண்பர்களே இந்த பதிவை வைத்து நீங்கள் என்னை எப்படி எடை போட்டாலும் சரி. இதை எல்லாம் சொல்வதற்கு நீ என்ன யோக்கியனா என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் என்றும் நான் கெட்டவனாகவே பலருக்கு இருந்த போதும் கேவலமானவனாக இன்றளவும் மாறவில்லை என்பதை பெருமையாக சொல்லுகிறேன். நண்பர்களை மதியுங்கள். நீங்கள் காயப்பட்ட போது குடும்பத்திற்கு பிறகு அதிக அக்கறை கொண்டவர்கள் நண்பர்களே. எதற்காகவும் நல்ல நண்பர்களையும், குடும்பத்தையும் உங்கள் தன மானத்தையும் விட்டுகுடுக்காதீர்கள்.. காதல் என்றும் தோற்பதில்லை. காதலர்களே சில இடங்களில் தொற்றுபோகிரர்கள்.

மாப்ள இங்க நான் ஒருத்தன் இருக்கேண்டா , மொத்தம் மூணு பேர்டா, பொண்ணு ஸ்ட்ராங்கா சொல்லு உசுர கொடுத்தாவது சேர்த்து வைப்போம், நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, உண்மையான என் நண்பர்களின் காதல் அனைத்தை விடவும் மேலானதே.) புரிந்தவர்கள் புரியவையுங்கள். புரியாததை போல நடிப்பவர்கள் தங்கள் கலட்டி விட்டதையும், கலட்டி விடப்போவதுயும் நினைத்து சிரியுங்கள்.