Tuesday, January 5, 2016

வாசம்... நுகரும் சக்தி...  இது இரண்டும் இல்லையென்றால் வாழ்கை வாசமே இல்லாமல் போயிருக்கும். நம்மில் பலர் பல விஷயங்களை வாசத்தை  கொண்டு அடையாளம் காண்பது உண்டு. உதாரணதுக்கு தாத்தாவின் வாசம்., ஊரின் வாசம், சாப்பாட்டின் வாசம், ஹாஸ்டல்  வாசம். பெட்ரோல் வாசம், குழந்தையின் வாசம், புதிய செருப்பு, சீப்பு, பேனா, தீப்பெட்டி, ரெயின் கோட் , குடை, திரை சீலை, வயல், கடல், பணம், மண், குளிர், குடம்  இப்படி வாசத்துக்கு வாசம் இடமும் பொருளும் வயதும்  மாறிக்கொண்டே இருக்கிறது.  பெரும்பாலும் நம் மனதில் அதிகம் இடம் பெற்றவை பாடல்களும் வாசமும் தன். சில நேரங்களில் ஆண்டுகளும் வயதும் எப்படி போகிறதென்பது  வாசத்தையும் பாடல்களையும் வைத்து தன் நினைவு கூற வேண்டி இருக்கிறது.  இப்படி  வயதும் வாசமும் அருகருகே இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

 உதாரணம் புதிய யூனிபோர்ம் , புத்தகங்கள் உங்களை உங்கள் பள்ளிக்கே அழைத்து செல்லும். மண்ணெண்ணெய் , கரி அடுப்பின் வாசம்,  வேப்ப மரத்து காய் , புளியம்பழத்தின் நார்,காய்ந்து உலர்ந்த சருகுகள் காற்றில் பறக்கும் வேப்பம்பூக்கள் , மர பெஞ்சுகள், இரும்பு நாற்காலிகள்,சைக்கிள் டயர், பெவிகால் , கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீர், அரசு மருத்துவமனையில் குடுக்கும் டானிக் , புதிய போர்வை, கொசு வர்த்தி இவையெல்லாம் நீங்கள் 1980 டு 1990 ல் பிறந்தவர்களா இருந்தால் உங்கள் குழந்தை பருவத்தை நினைவூட்டும். 

ஊதுபத்தி , புத்தாடை பைகள், சட்டை காலரின் இடையே வைக்கும் அட்டையின் வாசம், முறுக்கு, அதிரசம், வெடி மருந்து, கம்பி மத்தாப்பு, நல்லெண்ணெய், சீகைக்காய், வாழ்த்து அட்டை இவை எப்பொழுது உங்கள் மூக்கை கடந்தாலும் தீபாவளியின் வாசம். 

பேரிக்காய் என்றால் விநாயகர் சதுர்த்தி, பொங்கலும் சுண்டலும் மணந்தால் அது மார்கழி, வாழைமரத்தின் வாசம் ஆயுத பூஜை, இஞ்சியும், பூசணியும், ஏலமும், சுக்கும் தை மாதம் பொங்கல், பிரியாணி என்றல் ரம்ஜான், கேக் மற்றும் வண்ண காகிதங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர், இப்படி பண்டிகைகளும் வசமும் ஒன்றாக கலந்து இருப்பது இயல்பே. 

மனிதர்களின் வாசம், இதை நீங்கள் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடீர்கள் என்றால் உங்களுக்கு இயற்கையாகவே துப்பறியும் நிபுனராகக்குடிய அணைத்து குணங்களும் உள்ளது என்று அர்த்தம். பலர் சாதாரணமாக கேட்பதுண்டு. அப்பா வந்துட்டு போனாரா ? சித்தப்பா உபயோகபடுத்தின போர்வையா?, தாத்தா படுத்த பாயா ? இது ஒரு நிலைக்கு மேல் மேலே சென்று இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்ய வைக்கும் உதரணத்துக்கு யாரோ பிரியாணி சாப்படு வந்துருகாங்க, யாரு சிகரட் புடிச்சுட்டு வந்தது, இந்த கூடத்துல யாரோ குடிச்சுருக்கான் , யாரந்த தலை வலி தைலம்

இப்படியாக வயதும், இடமும், பொருளும், குணமும், மனிதர்களும் வாசத்தை  கொண்டு அடையாளம் காணும் குணாதிசயம் சிறு வயதில் இருந்தே பழக்கமாகிவிட்டது. 

இன்னும் என்னால் இந்த மோப்பம் பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை, சிவகங்கையில் வீட்டு தோட்டத்தில் தென்னை மரத்தின் வாசம் கண்ட நான், மதுரை புறநகர் வீதிகளில் விற்கும் மல்லிகை பூ, திருப்பத்தூர் கல்லூரியின் மரங்களின் வாசம், சென்னை ஸ்பென்சர்ஸ் மற்றும் அலுவலகங்களில் நுகரப்பட்ட டிஜிடல் மற்றும் பெர்பூம் வாசங்கள், திருச்சியில் காவேரி பலத்தில் உள்ள தண்ணீரின் வாசம், இப்பொழுது சற்று கடல் கலந்து வந்து துபாய் சாலைகளின் வாசம் என்று நுகர்ந்து கொண்டிருக்கிறேன். வாசமும் வாழ்கையும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... இன்னும் நுகர காத்து இருக்கிறேன்... 

Wednesday, February 15, 2012

வந்தவை... காதலர் தின வாழ்த்துக்கள்...








இலகுவான மாலை நேரம். அலுவலகத்தில் இருந்து அனைவரும் சென்றபிறகு இன்றைய நாளின் மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சியாக அடுத்த வாரம் முடிக்க வேண்டிய மின்னஞ்சல் வேலைகளை முடிக்க நினைத்து மாலை நேர தேநீர் கோப்பையில் மூழ்கிய என்னை கனவுலகம் போட்டி போட்டு வென்றது. எழுதி வெகு நாட்களாயிற்று. பழைய நண்பர்கள் மற்றும் பாலோயர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் எங்கு இருந்தாலும் நான் பெரிதான நம்பும் விதி அவர்களிடத்தில் இந்த பதிவை கொண்டு பொய் சேர்க்கட்டும். உலகத்தில் மனிதர்களை சேர்ப்பது தன் கடினம். மற்றவை எல்லாம் மிகவும் எளிதே.

மூன்று வயது சிறுவனாக சினிமாவிற்கு கூட்டிபோகவில்லை என்றால் டிரஸ் போடமாட்டேன் என்று அம்மாவிடம் அடம் பிடித்த சிறுவன். ஐந்து வயது சிறுவனாக காய்ச்சலே அடிக்காதபோது கழுத்தில் காய்ச்சல் அடிக்கிறது கை வைத்து பார் வெந்து போகும் அளவுக்கு சுடுகிறது என்று சொல்லி பால படத்தை பால கட் அடித்த சிறுவன். ஒன்பது வயது இருக்கும்போது பக்கத்துக்கு வீடு குழந்தையை கீழே போட்டதற்காக காலை, மதியம், மற்றும் இரவு உணவை தியாகம் செய்து மிகப்பெரிய தேடல் படலத்துகிடையே நிராயுத பணியாக மாமா விடம் சரணடைந்த சிறுவன். பக்கத்துக்கு வீடு அத்தையின் கண்ணாடி காரணமான என் கிரிகெட் பந்து, ஆசையாக வளர்த்த போது ரயிலடி பட்டு இறந்த நாய்குட்டிகள், ஞாயிறு அன்று பட இடைவெளியின்போது க்லோஸ் அப் விளம்பரம் இன்னும் சிறிது நேரம் வந்தால் ஞாயிறின் நேரம் சற்று நீளாதா என்று ஆராய்ச்சி செய்த சிறுவன். கிளிகள், புறா, மீன் தொட்டி, பேட், பந்து, சைக்கில், என்று வயதிற்கு ஏற்றதைபோல என் ஆசைகளும் வளர்ந்தது.
இப்படி ஒவ்வொரு பருவமும் மாற மாற என்னுடைய ஆசைகளும் மாறதொடங்கின. நம் முன் விரும்பிய பொருட்கள் பலவற்றை நம் திரும்ப விரும்புவதில்லை. விதியும் அதை நமக்கு திரும்பதருவதில்லை. அந்த வகையில் சற்றே அதை திரும்பி பார்க்கும் பார்வைதான் வந்தவை. பெரும்பாலும் வந்தவை அனைத்தும் சென்றவையாகவே உள்ளது. இந்த பதிவுகளில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நிஜமே, துளியும் கற்பனை அல்ல. இந்த பதிவுகள் யாரையேனும் காயப்படுத்தினால் அதற்கு நானே தார்மீக பொறுப்பு என்பதை தெரிவித்து கொள்கிறேன். விரும்பியது விலகினால் எப்படி இருக்கும். முதலில் ஒன்றும் புரியாது. பின்பும் உலகமே புரியும். ஆம் விரும்புங்கள். விரும்புங்கள். விரும்புங்கள். ஒரு நாள் தடுக்கபடுவீர்கள். சிறிதே விளக்கபடுவீர்கள். பின்பு மறக்கபடுவீர்கள்.


காதல் என்றால் என்ன? ஒரு மித கருத்துள்ள இருவர் தங்கள் கருத்து பரிமாற்றத்தின் மூலமாக வார்த்தை பரிமாற்றங்களை ஏற்படுத்தி பின் அது மனபரிமற்றமாக மாறி நாளடைவில், மகிழ்ச்சி பரிமாற்றங்களில் தொடங்கி முறையே அது கவலை பரிமாற்றத்தில் முடிவு பெறுகிறது. ( தனிப்பட்ட நபர்களுக்கு இந்த முடிவுகள் மாறும் - மது, புகை, மற்றும் போதை வஸ்துக்கள் இதற்கு மருந்து அல்ல, உதரணத்திற்கு இவற்றை எல்லாம் நீங்கள் எடுதுகொண்டிருக்கும் வேலையில், உங்களுக்கு அல்வா கொடுத்தவர்கள் ( ஆண் அல்லது பெண் ) தன சக துணையுடன் காலத்தை களிக்கதொடங்கி இருப்பார். இதற்கான மருந்து எளிதானது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக அமைத்து கொள்கிறீர்களோ அவ்வளவு சிறப்பான காலனி அடி ( மன்னிக்கவும் பதிலடி ) ஐ நீங்கள் கொடுக்க துவங்கி உள்ளீர்கள் என்று அர்த்தம்.

தயவு செய்து செத்துடுவேன், என்ற வார்த்தை கண்டு மயங்கி விடாதீர்கள். முடிந்தால் விஷமோ , கயிறோ வாங்கி குடுக்கவும். உங்களை தொங்க விடுவார்களே ஒழிய அவர்கள் தொங்குவது வேறு எதையாவது பிடித்து தான்

ஆகவே மக்களே காதல் செய்வீர், களவு செய்வீர், கற்று மறப்பீர். பிறந்த குழந்தை அழும், நடக்கும்போது விழும், இருந்தாலும் பின்பு சரித்திரத்தில் தனது நடையை பதிவு செய்ய தொடங்கும்.

ஆகவே நண்பர்களே இந்த பதிவை வைத்து நீங்கள் என்னை எப்படி எடை போட்டாலும் சரி. இதை எல்லாம் சொல்வதற்கு நீ என்ன யோக்கியனா என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் என்றும் நான் கெட்டவனாகவே பலருக்கு இருந்த போதும் கேவலமானவனாக இன்றளவும் மாறவில்லை என்பதை பெருமையாக சொல்லுகிறேன். நண்பர்களை மதியுங்கள். நீங்கள் காயப்பட்ட போது குடும்பத்திற்கு பிறகு அதிக அக்கறை கொண்டவர்கள் நண்பர்களே. எதற்காகவும் நல்ல நண்பர்களையும், குடும்பத்தையும் உங்கள் தன மானத்தையும் விட்டுகுடுக்காதீர்கள்.. காதல் என்றும் தோற்பதில்லை. காதலர்களே சில இடங்களில் தொற்றுபோகிரர்கள்.

மாப்ள இங்க நான் ஒருத்தன் இருக்கேண்டா , மொத்தம் மூணு பேர்டா, பொண்ணு ஸ்ட்ராங்கா சொல்லு உசுர கொடுத்தாவது சேர்த்து வைப்போம், நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே, உண்மையான என் நண்பர்களின் காதல் அனைத்தை விடவும் மேலானதே.) புரிந்தவர்கள் புரியவையுங்கள். புரியாததை போல நடிப்பவர்கள் தங்கள் கலட்டி விட்டதையும், கலட்டி விடப்போவதுயும் நினைத்து சிரியுங்கள்.

Thursday, January 13, 2011

இறப்பு ஒரு நல்ல வியாபாரம் ...

இறப்பு ஒரு நல்ல வியாபாரம் ...

தலைப்பை பார்த்ததுமே பலர் தவிர்ப்பீர்கள் என்று நினைக்கின்றேன். செத்தால் தன் சுடுகாடு தெரியும் என்பது பழமொழி... அது போலத்தான் நமக்கும் நண்பர்கள் வீட்டில் இறப்பு நடந்த போதும் சரி, உறவினர் வீட்டில் இறப்பு நடக்கும் போதும் சரி நாம் இழந்து பகுதியில் இருந்தோம் என்பதால் அதன் வலி நம்முள் சூழ்ந்து இருக்கும். அனால் அந்த இறப்பு எதனை பேருக்கு சோறு போடுகிரதேன்பதை சமூகத்தை விட்டு சற்றே தள்ளி நின்று பாருங்கள் புரியும். இறந்தவுடன் நாம் அழைக்கும் முதல் அழைப்பு அமரர் ஊர்தி , யாருமே சாகாமல் இருக்கும் பொது அந்த வண்டியின் ஓட்டுனர் எதைக்கொண்டு சாப்பிடுவார்? கிராமத்தில் சாவுக்கு கூத்து கட்டுபவர்கள் என்று ஒரு சாரர் உண்டு... இறப்பு இல்லாவிட்டால் அவர்களுக்கு பிழைப்பே கிடையாது... அதே போல் நயனம், மேளம், தாளம், பாடை கட்டுபவர், மலர் அலங்கரிப்பவர், வெட்டியான், இப்படி ஒரு கூட்டமே மற்றவரின் சாவை எதிர் பார்த்து இருக்கையில் சாவு ஒரு நல்ல விஷயமே... வெளிநாடுகளில் இதை விட ஒரு படி மேலே போய் இதை ஒரு தனி வியாபாரமாகவே செய்து வருகின்றனர். உதரனத்திற்க்கு நம் மதுரையை எடுத்து கொள்வோம், இதை இன்னும் 50 களைத்து பார்ப்பீர்களேயானால் மிதம் மிஞ்சிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். அப்போது இறந்தவர்களை அடக்கம் செய்வது வீட்டினுள் இயலாத காரியம் . இதற்கென்று வெளிநாட்டில் உள்ளதைப்போல் இறுதி மரியாதை மையங்கள் திறக்கப்பட்டு இருக்கும். அங்கு குளிர்பதன வசதி முதல் மலர்வளையம் வரை அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும், அகவே நீங்கள் கணினியில் ஒரு சொடுக்கு சொடுக்கினால் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு மலர் வலயம் அனுப்பி வைக்க இயலும். இது சிறிய அளவில் மட்டுமல்லாமல் வரும் காலத்தில் பெரிய வியாபாரமாகவே மாறிவிடும். வாய்ப்பில்லை என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது.

யோசித்து பாருங்கள் 50வருததிர்க்கு முன்பு திருமணங்கள் எங்கு நடை பெற்றன. பெரும்பான்மை வீட்டில் மட்டுமே நடை பெரும், பின்பு இடப்பற்றாக்குறை இருந்ததால் கல்யாண மண்டபம் கட்டும் எண்ணம் வந்தது, அது போல தன இறுதி மரியாதையும், இனிமேல் இதற்கென்று மையங்கள் வரத்தான் போகின்றன, பதிவு முறையில் ப்ரோகிதர்களும், மலர் தூவல்களும், பதிவு செய்யப்பட்ட கண்ணீரும் கிடைக்கத்தான் போகிறது. இதற்கான மேற்பட்ட தகவல்களை காண www.maranam.com

இப்பொழுது நானும் மரணத்தை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆம் இந்த இனைய தளத்திற்கான புதிய தகவல் எழுதும் பணியினை பகுதி நேரப்பணியாக நன் செய்து வருகிறேன்... அனுதினமும் மரணத்தை காண்கின்ற பாக்கியம் பெற்றவன் நான் என்பதில் மன நிம்மதி கொள்கிறேன்,,, வாருங்கள் சிறிதே மரணத்தின் பாதையை காணுங்கள்

Monday, June 28, 2010

கவிதை - சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல...

கவிதைன்னு சொன்ன உடனே பக்கம் தாவீடாதீங்க,இது உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன்...
எனது முதல் முயற்சியான அன்ரிசர்வ்ட் ரயில் பயணத்துக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. அப்பப்போ கவிதைங்கற பேர்ல மத்தவங்கள கஷ்டப்படுத்த முயற்சி செய்வேன்... இந்த முறையும் முயன்று இருக்கேன்... தயவு செய்து பொறுமையா படிங்க...

சத்தியமாக இது உங்களின் நொடிகளை வருடமாக்கும் படைப்பல்ல

(குறிப்பு இதை நீங்கள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்)

=============================================================

பொறுமை:

நொடிகள் வருடங்களாகின்றன பின்வரும் சமயங்களில்...

மதிய நேர கணித வகுப்புகள் ...

பெற்றோர் ஆசிரியர் கூட்ட முடிவுரை ...

பரிட்சை முடிவு வரும் முன் இரவு ...

அவசர நேரங்களில் சாலைகளில் சிவப்பு விளக்கு ...

சித்திரை மாத மதிய வேலையில் பேருந்து பயணம் ...

நேர்காணல் முடிவுக்காக காத்திருக்கும் நேரம்...

பல் வலி மருத்துவரிடம் சீட்டு வாங்கும் வரிசை ...

வார இறுதியில் அன்ரிசர்வ்ட் ரயில் பயணங்கள் ...

சம்பளம் வருவதற்கு முந்தைய இரண்டு நாட்கள்...

மனிதன் பொறுமையின் சின்னம் மேற்கூறிய தருணங்களில்...

====================================================================


செம்மொழியான தமிழ் மொழியாம்...

தம்பியின் இரங்கல் கூட்டம் நடக்க வேண்டிய வேலையில்...

அண்ணனுக்கு பாராட்டு விழா...

உடன்பிறப்பே உனக்கு என்று தமிழ் உணர்வு உண்மையில் வரும்...

செம்மொழியான தமிழ் மொழியாம்...

====================================================================
அக்கறை

என் வயிற்றின் மீதுள்ள அக்கறை...

உங்கள் கால்களின் மீதும்...

செருப்பு தைக்கும் தொழிலாளி...

=====================================================================

Saturday, June 26, 2010

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:

அன்ரிசர்வ்ட் ரயில் பயணம், மனித மனங்களின் ஒரு ஆராய்ச்சி:
உலகில் நான் வெறுக்கும் முதல் விஷயம் அன்ரிசர்வ்ட் ரயில் பயணம். எதிர்மறையில் தான் வாழ்கையின் தத்துவங்கள் எத்தனிக்கும். நானும் கண்டுகொண்டேன் மனிதர்களின் மனங்களையும் அதன் வகைகளையும். பயணசீட்டு வரிசையில் நிற்கையில் வரிசையை மீறி உல் செல்ல நினைப்பவரும் மனிதர்தான், அதே வேலையில் சீட்டு விநியோகம் செய்பவர் சில்லறை இல்லை என்றால் சீட்டு இல்லை என்று கூறுகையில் முன்பின் தெரியாத போதிலும் சில்லறை கொடுத்து உதவுகிரரே உங்கள் பின் நிற்பவர் அவரும் மனிதர் தான்.

பெரிய நிறுவனங்களுக்கென்று எப்பொழுதுமே ஒரு பழக்கம் உண்டு, அது நேர்காணலுக்கு முந்தயதினத்தில் தொலைபேசி அழைப்பில் அறையும் குறையுமாக தகவல் கூறி நேர்காணலுக்கு அழைப்பது. இதற்கு நன் ஒன்றும் விதி விலக்கல்ல. செய்தி பெறப்பட்ட பின் அடித்து பிடித்து ரயிலுக்கு பயணசீட்டு எடுத்து உள்ளே நுழையும் வேலையில் 1 மயில் நீளம் கொண்ட அந்த ரயிலின் அனைதுப்பெட்டிகளும் நிரம்பி வழிந்தது. 6 மணி நேரம்தானே நின்றுகொண்டே செல்லலாம் என்று தீர்மானிக்கையில் ஒரு நப்பாசை, நாம் ஏன் ரயிலின் முன்பகுதி பெட்டியைபார்க்ககூடாது என்று, ஓட்டமும் நடையுமாக முன்பெட்டியை நெருங்கும்போது என் தமிழ் ஆசிரியர் நினைவுக்கு வந்தார். "இக்கரைக்கு அக்கறை பச்சை"

பொறுமலோடு உள்ளே புகுந்த எனக்கு மனித மனங்களை படிக்கும் வாய்ப்பு நிறைய இருந்தது. சட்டி முட்டி சாமான்களுடன் குடும்பங்கள் நின்று கொண்டு இருக்கும் வேலையில் வெளியே கதவோரம் காற்றுக்காக நிற்கும் கணவர்களுக்காக சண்டை போட்டு இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கும் போராளிகளான மனைவிகள், 6 மணி நேரமோ 8 மணி நேரமோ நிற்கப்போவது நீதானே நாங்கள் இல்லையே என்றபடி தங்கள் பேரக்குழந்தைகளை படுக்க வைத்துகொள்ளும் தாத்தாக்கள், எங்கே ஓரத்தில் குழந்தையை உட்காரவைத்தாள் சிறிது தள்ளி உட்கார சொல்லி நம் சவுகரியத்தை கெடுத்து விடுவார்களோ 1 வயது குழந்தையையும் தூங்கு தூங்கு என்று கட்டாயபடுத்தி இருக்கையின் நடுவில் தூங்க வைக்கும் அம்மாக்கள், நின்றால் என்ன உட்காந்தால் என்ன காதல் வலி அறியாது என்று கடந்த 3 மணி நேரமாக அலைபேசியில் கடலை வறுத்து வரும் காதலர்கள்.

ரயில் தாம்பரத்தை தாண்டும் வேலையி மனித வாழ்வுக்கு மூச்சு கற்று எவ்வளவு அவசியம் என்று தெரிந்தது. நடுவில் நிற்கும் எனக்கே இப்படி என்றல் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அந்த தியாகிகளுக்கு திருச்சி செல்ல என்ன அவசரமோ பாவம். நொந்து கொண்டேன், என் வயதை ஒத்த ஒரு இளைஞன் என்னை பார்த்து புன்னகைத்து பெரிய மனது செய்து ஒரு ஜான் அளவுள்ள இடத்தை எனக்கு கொடுத்தார்.ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கியது போல ஒரு சந்தோஷம் எனக்கு.

இந்த மூன்று மணி நேர கால் வழியில் என் கண்ணுக்கு வந்து போனவர்கள், ஊரெல்லாம் நடந்து சென்று கீரை விற்கும் பாட்டி, கொரியர் தபால் கொண்டு வரும் சிறுவன், துணிக்கடையில் வேலை ஓடி ஓடி துணி எடுத்துப்போடும் சிப்பந்தி, இரவு நேரத்தில் நின்று கொண்டே தூங்கும் இரவுக்காவளர்கள். அவர்களுக்கும் இதே கால்கள் இதே வலி தானே. விழுப்புரம் தாண்டியதும் அனைவரின் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை. வண்டியில் உள்ள குழந்தைகள் விளையாட துவங்கினர். அந்த வலிகளையும் தண்டி 2 வயது குழந்தை தந்த பறக்கும் முத்தங்களும், முக சேஷ்டைகளும் என் மனதிற்குள் குளிர்ந்த காற்று அடித்தது. இடை வந்த தேநீர் விற்பவரும், கடலை விற்கும் பாட்டியும் என் பாதத்தின் மீது பரத நாட்டியம் ஆடுவதை ஒரு சமுதாய தொண்டாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செய்து வந்தனர்.

இந்த 6 மணி நேர அனுபவத்திற்கு பிறகு வழியில் நடந்து செல்லும் இளைஞர்களை கண்டால் என்னுடைய வண்டி தானாக நிற்கிறது, நேர்காணலுக்கு செல்பவர்களை கண்டால் அவர் செல்லும் இடத்துக்கு சென்று விட மனது பறக்கிறது, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க எனது நேர்காணல் அனுபவத்தை எனது அடுத்த படைப்பில் கூறுகிறேன்.